Perukaranai Madabusi Sriman Chakravarthiyaarya Maha Desikan

The Twenty-four steps !
Home
God always comes for your rescue !
Dharmam
Kannikaa Dhaanam
The Twenty-four steps !
Like Emberumaan, Thaayaar too takes Avataar
Mouna Vritham
Ten + Three + One
Pushpanjali
Sri Perukaranai Swami speaks about Kanchi and its close link with the twenty-four steps !

இருபத்துநான்கு படிகள்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.  இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்யஸ¥¡¢கள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை.  இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷ¢தங்களையும் கொடுத்துக் கொண்டும், 'அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:' என்ற ¡£தியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.  இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.
அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்யதேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.  கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக் காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.
ஸ்ரீரங்கமங்களநிதிம் கருணாநிவாஸம்,   ஸ்ரீவேங்கடாத்¡¢சிகராலயகாளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைலசிகரோஜ்ஜ்வலபா¡¢ஜாதம்,  ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||
என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தொ¢ந்ததே.  மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.  கோவிலில் நடை மிகவும் அழகு.  திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தொ¢யும்.  பெருமாள் கோவிலில் குடை விசேஷம்.  திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம். 
இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.  அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.  இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.  க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.  இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார். 
 தாமாஸீதந் ப்ரணம நகா£ம் பக்திநம்ரேண மூர்த்நா
 ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாது¡¢ச்சாவசேந |
 யத்வீதீநாம் கா¢கி¡¢பதேர் வாஹவேகாவதூதாந்
 தந்யாந் ரேணூந் த்¡¢தசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை: ||   என்று.
தேவப்பெருமாளின் உத்ஸவம் விமா¢சையாக நடக்கிறது.  அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பா¢ முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.  வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.  ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.  அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.  அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.  அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.  வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.  அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.
மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன், "வந்தே ஹஸ்திகி¡£சஸ்ய வீதீசோதககிங்கராந்" என்று அருளிச்செய்தார்.  தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.
'தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.  அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்தநிரஸநபூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள்.  அவர்களை வணங்குகிறேன்" என்பது அதன் உட்கருத்து.  இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று? ஸ்ரீபெரும்பூதூ¡¢ல் அவதா¢த்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று, அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.  மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தொ¢வித்தான்.  இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.  வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து, இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.  ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்? நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவ¨ஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.  மறைக்கவும் முடியாது. 
மேலும் கருட உத்ஸவம் இந்த ஊ¡¢ல்தான் விசேஷம்.  'அத்தியூரான் புள்ளையூர்வான்' என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.  இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது,  இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவத்தை சொல்லுகிறேன், கேண்மின்.
இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூ¡¢ல் பல விஷயங்களில் உள்ளது.  குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.  வானவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.  த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.  அனந்த ஸரஸ்ஸில் இருபத்துநான்கு படிகள்.  கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.  கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.  இவையும் இருபத்துநான்கே.  இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூ¡¢ல்தான் உள்ளது.  ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தொ¢ந்ததே.  இதற்கு காரணம் இருபத்துநான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்¡¢யின் அர்த்தத்தை விவா¢ப்பதற்காக அந்த மகா காவியம் அவதா¢த்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.  அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.  'காயத்¡¢யில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே' என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.  இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்பைய தீக்ஷ¢தர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச்செய்திருக்கிறார்.  இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.  ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.  'ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷ¤ லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே' என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.  திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீக்ஷ¢தர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் -
 ஸம்ஸாரவா¡¢நிதிஸந்தரணைக போத -
 ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
 தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
 பஸ்யந் பவந்த முபயாதி கா£ச நூநம் ||
வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்தி¡¢யம் ஐந்து, ஜ்ஞாநேந்தி¡¢யம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பி¡¢வுகள், சேதனன் என்பவன் ஜீவன், இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா. தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.  அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, 'அவை தோஷத்தோடு கூடியவை' என்று அறிந்துவிடுவதற்காக.  இப்படி அறிந்தவன்தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.  இந்த அசேதனம் இருபத்துநான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.  'ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்துநான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகி¡¢யில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது' என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.  இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.  இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்யதேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும் வாசாமகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.
*****
 

Sri Perukaranai Swami's observation is something incredible !