தர்மம் தலைகாக்கும்
தர்மம் அதர்மம் என்று
இரண்டு உண்டு. தர்மம்
செய்பவனை தர்மிஷ்டன்
என்றும், அதர்மம் செய்பவனைப்
பாவி என்றும் சொல்லுவார்கள்.
சாஸ்திரங்களில் 'இதைச்
செய்' என்று சொல்லப்பட்டு,
நமக்கு இன்பங்களைக் கொடுப்பது
தர்மம். 'இதைச் செய்ய
வேண்டாம்; இதனால் தீங்குகள்
விளையும்' என்று சொல்லப்படுவது
அதர்மம்; தர்மத்தைச்
செய்பவன் நியாயமான மார்க்கத்தில்
செல்பவன். நியாய மார்க்கத்திலிருந்து
நல்ல கா¡¢யங்களைச் செய்யும்
தர்மிஷ்டன் என்றைக்கும்
கஷ்டத்தை அடையமாட்டான்.
அவன் செய்யும் தர்மமே
அவனைக் காக்கும். ஆகையால்தான்
அக்ரமமான கா¡¢யங்களைச்
செய்ய மகான்கள் இசையமாட்டார்கள்.
ஸ்ரீராமன் தான் அரசிழந்து
காட்டிற்குச் சென்ற சமயத்தில்
லக்ஷ்மணனைப் பார்த்துக்
கூறுகிறான்: 'ந ஹீச்சேயம்
அதர்மேண சக்ரத்வமபி துர்லபம்',
'அதர்மபயவீதஸ்ச நாத்மாநமபிஷேசயே'
என்று. "லக்ஷ்மணா, நான்
அதர்மத்திற்குப் பயப்படுகிறவன்;
தப்புக் கா¡¢யங்களைச்
செய்ய விரும்பாதவன்.
அயோத்தியில் முடிசூட்டிக்
கொள்வது எனக்கு மிகவும்
சூலபமானதே. ஆயினும் அதர்ம
மார்க்கத்தில் அரசைப்
பெற விருப்பமில்லை. அயோத்தி
என்ன? தேவலோகத்திலிருந்து
இந்திரபதவியை அடைந்து
அரசு பெறவும் எனக்குச்
சக்தி உண்டு. என் கோதண்டமும்
பணமும் எங்கே சென்றன?
அநீதி மார்க்கத்தில்
இருந்து பணம் சம்பாதிக்கக்கூடாது
என்பதனால்தான் சும்மா
இருக்கிறேன். தர்மத்தைக்
கடைபிடித்து நாம் ரக்ஷ¢த்தால்
அது நம்மைக் காக்கும்
என்றான்.
உலகத்திலும் அதர்மத்தை
விரும்பாமலிருப்பதற்கு
மூன்று காரணங்கள் உள்ளன.
பரலோகத்தில் சென்று இன்பங்கள்
நமக்கு இல்லாமற் போய்விடுமோ
என்று பயந்து இவ்வுலகத்தில்
அதர்மத்தைச் செய்ய மாட்டார்கள்.
அக்கிரமங்களைச் செய்தால்
யமன் நம்மை அழைத்துச்
சென்று தனது உலகத்தில்
பல யாதனைகளுக்கு ஆளாக்குவான்
என்ற பயத்தினால் தப்புக்
கா¡¢யங்களைச் செய்ய மாட்டார்கள்.
நாம் தப்புச் செய்யும்
போது உலகத்தவர் பார்த்துவிட்டால்,
'ஐயோ! இவன் மகாபாவி; சாஸ்திரத்துக்கு
முரணாக வேலைகளைச் செய்பவன்;
எதற்கும் அஞ்சாதவன்.
இவனுடன் சேர்ந்தாலே நமக்கும்
பாவம் உண்டாகும்' என்று
பா¢கசித்து நிந்திப்பார்கள்
என்ற காரணத்தாலும் பாவங்களில்
ஈடுபடமாட்டார்கள்.
பரலோகபயாத் கேசித்,
யமதண்டபயாத் பரே |
பரஸ்பரபயாத்
கேசித் பாபம் நேச்சந்தி
மாநவா: ||
இந்த மூன்று காரணங்களைக்
கொண்டு உலகத்து ஜனங்கள்
அக்ரமமான வேலைகளைச் செய்யாதிருக்கின்றனர்.
இந்த மூன்று விதப் பயமுமற்று
இஷ்டப்படி தி¡¢ந்து ஆடுமாடுகளைப்
போல் நடக்கிறவர்களைப்பற்றி
நாம் மனத்தினாலும் நினைக்கவேண்டாம்.
அதர்மத்துக்குப்
பயந்து தர்மமார்க்கத்தில்
செல்லுகிறவன் என்றைக்குமே
கஷ்டப்படமாட்டான். அவனுக்கு
தெய்வம் சகாயம் செய்யும்.
அளவற்ற சுகத்தைப் பெறுவான்.
இதைத் தான் நாம் இங்குக்
கூற வந்தோம்.
ஓர் ஊ¡¢ல் ஒரு வியாபா¡¢
இருந்தான். அவன் நிறையப்
பணமுள்ளவன். பணத்தைப்
பிறருக்குக் கொடுத்து
லேவாதேவி செய்பவன். பண
ஆசை பிடித்தவன். இவன்
கடன் கொடுக்கும் பொழுதே
எழுநூறு ரூபாய் கொடுத்து
ஆயிரம் ரூபாய்க்குப்
பாண்டு எழுதி வாங்கிக்
கொள்வான். 'நாமும் சுகப்பட
வேண்டும்; ஜனங்களும்
நம்மைப் போல் சுகமடைய
வேண்டும்' என்ற எண்ணம்
இவனுக்கு லவலேசமும் கிடையாது.
தன் லாபத்திலேயே நோக்கமுள்ளவன்.
பெரும்பாலும் எல்லா
வியாபா¡¢களுக்குமே இந்த
எண்ணம் உண்டு. பஸ் ஓட்டுகிறவன்
ஜனங்களுடைய செளகா¢யத்தை
நோக்குகிறானா? ஆஸ்பத்தி¡¢
ஏற்பாடு செய்து வைத்தியம்
செய்கிறவன் ஜனங்களுடைய
§க்ஷமத்தையா எதிர்பார்க்கிறான்?
இன்னும் ஆயிரக்கணக்கான
மக்கள் வந்து வைத்தியம்
செய்து கொண்டால் தனக்கு
லாபம் வரும் என்றுதானே
எதிர்பார்க்கிறான்.
ஜவுளிக்கடை, மளிகைக்கடை
வைப்பவர்கள் தங்கள் நலத்தைத்தான்
கவனிக்கிறார்களேயன்றி
ஜனங்களுடைய §க்ஷமத்தை
எதிர்பார்ப்பதில்லை.
அதிகா¡¢களும், 'ஜனங்களுக்குச்
சேவை பு¡¢யவே நாம் ஏற்பட்டிருக்கிறோம்'
என்பதை மறந்து, தங்களது
லாபத்திலேயே நோக்கமுடையவர்களாக
இருக்கின்றனர் என்பது
சகஜமாகிவிட்டது. ஆயினும்
இந்த லேவாதேவி செய்யும்
வியாபா¡¢ மிக்க பேராசை
பிடித்தவன். நாலு ஐந்து
வட்டிக்குக் குறையாமல்
கடன் கொடுக்க மாட்டான்.
இவன் கெடு வைத்தபடி பணத்தை
வசூல் செய்துவிடுவான்.
இவன் ஒரு சமயம் பலருக்குப்
பணத்தைக் கொடுத்துவிட்டான்.
வெகு நாள் சென்றன. இந்தப்
பணத்தை வசூல் செய்வதற்குக்
குதிரைவண்டியில் ஏறிக்கொண்டு
ஆங்காங்கே சென்றான்.
பணமும் வசூலாகிவிட்டது.
ஒவ்வோர் இடத்திலும் அவரவர்
கொடுத்த அசல் வட்டி எல்லாவற்றையும்
தனித்தனியே பையில் போட்டுக்
கட்டி எடுத்துக் கொண்டு
வண்டியிலேறிக் கொண்டு
ஊருக்குத் திரும்பினான்.
வரும்போது வழியில் ஒரு
பணப்பை கீழே தவறி விழுந்துவிட்டது.
வீட்டிற்கு வந்ததும்
ஒவ்வொரு பையையும் கணக்கிட்டுப்
பீரோவில் வைத்தான். அப்பொழுதுதான்
தன்னிடமிருந்து ஒரு பை
காணாமற்போனதை அறிந்தான்.
அப்பொழுது இரவு மணி
பத்து. இனி என்ன செய்வான்?
காலை விடிந்ததும் கவனித்துக்கொண்டே
வண்டி வந்த வழீயாகப்
பார்த்தான். கிடைக்கவில்லை.
பணத்தில் அதிக ஆசை வைத்திருந்த
இவனுக்குப் பணப்பை தொலைந்து
போன படியால் தூக்கமும்
இல்லை; நிம்மதியும் இல்லை.
கவலை அதிகமாகிவிட்டது.
எவ்வளவோ அதிகமான லாபத்தை
இவன் அடைந்திருந்தபோதிலும்
நஷ்டமான பணத்தைப்பற்றியே
வருத்தம் அதிகமாக இருந்தது.
இதை எப்படியாவது பெற
வேண்டும் என்று எண்ணி
ஒரு சூழ்ச்சி செய்தான்.
"என் பணப்பை வண்டியில்
வரும்போது கீழே நழுவி
விழுந்துவிட்டது. அந்தப்
பையைப் பணத்துடன் யார்
கொண்டுவந்து கொடுக்கிறார்களோ
அவர்களுக்கு நூறு ரூபாய்
இனாம் தருகிறேன்" என்று
ஊ¡¢ல் ஒவ்வொரு வீதியிலும்
தண்டோரா அடித்தான்.
அந்த ஊ¡¢ல் ஓர் அந்தணர்
இருந்தார். அவர் நன்கு
வேதமோதியவர்; தர்மநெறியை
மீறாதவர்; நல்லொழுக்கமுடையவர்;
தெய்வபக்தியுள்ளவர்.
அவர் பரம ஏழையாயினும்
பிறர் பொருளை விரும்பாதவர்.
வழியில் ஏதாவது பணம்
கிடைத்தாலும் அதைக் காஷ்டலோஷ்டத்துக்குச்
சமமாக நினைப்பவர். அவர்
அன்றிரவு வரும்போது இந்தப்
பணப்பையைக் கண்டார்.
வழியில் இதைக் கண்டதும்
சொந்தக்காரனிடம் கொடுத்துவிட
எண்ணி வீட்டுக்கு எடுத்து
வந்தார். மனைவி மக்கள்
எல்லாரும் இதைப் பார்த்து,
"இதை யா¡¢டமும் சொல்ல வேண்டாம்.
நாமே எடுத்துக் கொள்ளலாம்"
என்று பலவந்தம் செய்தார்கள்.
ஆயினும், 'இது பிறர் பொருள்
ஆகையால் இதில் ஆசைவைக்கக்கூடாது'
என்று எண்ணி, அவர் இதைச்
சொந்தக்காரனிடம் கொடுத்துவிட
வேண்டும் என்று ஒரே மனதாக
இருந்தார். மறு நாள்
வியாபா¡¢ ஒவ்வொரு வீதியிலும்
தண்டோராப் போட்டதைக்
கேட்டதும், அவனிடத்தில்
இந்தப் பையைக் கொடுத்து
நூறு ரூபாய் பெற்றுக்
கொள்ளலாம் என்று மனத்துள்
மகிழ்ந்தார். உடனே கையை
எடுத்துக் கொண்டு முன்சொன்ன
வியாபா¡¢யிடம் சென்றார்.
பணப்பையைக் கொடுத்தார்.
"நான் வெளியூ¡¢லிருந்து
வீட்டுக்கு வரும்போது
வழியில் இந்தப் பை கிடைத்தது.
இதைச் சொந்தக்காரா¢டம்
கொடுக்க வேண்டுமென்று
எண்ணினேன். நீங்களும்
தண்டோரா முறையில் பறைசாற்றினீர்கள்.
இதை உங்களிடம் கொடுத்தேன்"
என்று சொன்னார்.
வியாபா¡¢ நஷ்டதிரவிய
லாபம் என்று மகிழ்ச்சியடைந்தான்.
பையை வாங்கி ரூபாயை எண்ணினான்.
அதில் அவன் வைத்திருந்த
தொள்ளாயிரம் ரூபாய் இருந்தது.
பிறகு, "அந்தணரே, நீர் போய்வாரும்"
என்றான். இவர், "நூறு ரூபாய்
கொடுப்பதாகப் பறைசாற்றினீர்களே;
அதைக் கொடுங்கள்" என்றார்.
சூழ்ச்சி மூலமாகப் பணத்தைப்
பெறத் தண்டோரா அடித்த
வியாபா¡¢ நூறு ரூபாயைக்
கொடுக்க இசைவானா?
"அந்தணரே! இந்தப் பையில்
ஆயிரம் ரூபாய் வைத்திருந்தேன்.
நீர் நூறு ரூபாயை எடுத்துக்
கொண்டு மீதி தொள்ளாயிரம்
ரூபாய்தானே வைத்திருக்கிறீர்?
நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு
மறுபடியும் ஏன் நூறு
ரூபாயைக் கேட்கிறீர்?
இவ்வளவு பேராசையா? அந்தணர்
குலத்தில் பிறந்தும்
இவ்வளவு மோசமாக நடந்து
கொள்கிறீரே!" என்று திட்டி,
அவரை வேலைக்காரன் மூலமாக
அடித்து வெளியில் தள்ளித்
தாழிட்டுவிட்டான்.
'தர்மநெறியில் தவறுதலின்றி
நடந்த நமக்குமா இந்த
கதி!' என்று எண்ணி வருத்தமுற்ற
அந்தணர் தமது இல்லத்துக்கு
வந்தார். அன்று இரவெல்லாம்
ஒரே வேதனை: 'பணப்பையைப்
பி¡¢க்காமல் அப்படியே
கொடுத்திருந்தும் நூறு
ரூபாயை நாம் எடுத்துக்கொண்டதாகப்
பழியை நம்மேல் சுமத்தினானே!'
என்ற கவலை இவருக்கு அதிகா¢த்தது.
'வியாபா¡¢ இப்படி மோசம்
செய்துவிட்டானே; இவனது
கர்வத்தை அடக்கவேண்டும்'
என்ற எண்ணமும் உண்டாயிற்று.
காலையில் எழுந்ததும்
அந்தணர் ஊ¡¢லுள்ள நியாயஸ்தலத்துக்குச்
சென்றார். நடந்ததை அப்படியே
கூறித் தமது மனக்கவலையை
எடுத்துரைத்து நியாயம்
வழங்க வேண்டுமென்று முறையிட்டார்.
நியாயாதிபதி, "நாளை வாரும்"
என்று சொல்லி ஆலோசனையில்
ஆழ்ந்தார். மறுநாள் காலை;
நியாய ஸ்தலம். அந்தணரும்
வியாபா¡¢யும் வந்திருக்கின்றனர்.
பொது மக்கள் சூழ்ந்துகொண்டு
இவ்விஷயத்தில் என்ன தீர்ப்பு
நடக்கப் போகிறது என்று
ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தனர். நீதிபதி
அந்தணரைக் கூப்பிட்டு,
"உமது குறை என்ன?" என்று
கேட்டார். அந்தணர் எழுந்திருந்து,
"நியாயம் வழங்குபவரே!
நான் வரும்போது வழியில்
பணப்பை கிடைத்தது வாஸ்தவம்.
அதை உடையவனிடம் கொடுக்க
வேண்டும் என்று நினைத்து
எடுத்தேன். அதை நான்
பி¡¢த்தும் பார்க்கவில்லை.
இந்த வியாபா¡¢ பறைசாற்றியதைக்
கேட்டு இவரே இதற்கு உடையவர்
என்று எண்ணி இவா¢டம் கொடுத்து,
இவர் சொற்படி நூறு ரூபாயைக்
கேட்டேன். இவர் கொடுக்கச்
சம்மதிக்காமல் அபாண்டமான
பழியை என்மேல் சுமத்தி
அடித்து விரட்டிவிட்டார்.
நான் பணத்தில் ஆசையுள்ளவனாக
இருந்தால் பணப்பையையே
ஏன் இவா¢டம் காட்ட வேண்டும்?
அப்படியே அதில் இருந்த
அனைத்தையும் எடுத்துக்கொண்டிருக்கலாமே"
என்றார்,
உடனே நீதிபதி வியாபா¡¢யைக்
கேட்டார். வியாபா¡¢ எழுந்தான்.
"ஐயா, நான் இந்த ஊ¡¢ல் ஒரு
பொ¢ய வியாபா¡¢; எல்லாருடைய
மதிப்புக்கும் உ¡¢யவன்;
பொ¢ய பணக்காரன். அனைவரும்
என்னை நன்கு அறிந்திருக்கின்றனர்.
பணத்தாசையால் அற்பமான
செயலைச் செய்யமாட்டேன்.
என் பணப்பை தொலைந்தது
வாஸ்தவம். 'அதைக் கொண்டு
கொடுப்பவருக்கு நூறு
ரூபாய் இனாம் தருகிறேன்'
என்று சொன்னது வாஸ்தவம்.
என் கையில் ஆயிரம் ரூபாய்
இருந்தது. இவர் கொடுத்த
பையைப் பி¡¢த்து இவரெதி¡¢ல்தான்
எண்ணினேன். தொள்ளாயிரம்தான்
இருந்தது. ஆகவே இவர்
நூறு ரூபாய் எடுத்துக்
கொண்டு பையைக் கொடுத்திருக்கிறார்
என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படியிருக்க மறுபடியும்
எப்படி நூறு ரூபாயைக்
கொடுக்க முடியும்? யோசித்து
நீங்களே கூறுங்கள்" என்றான்,
நீதிபதி தீர்க்க ஆலோசனை
செய்தார். பணத்தில் பேராசையை
அடைந்த வியாபா¡¢யின் தந்திரம்
இது என்று உணர்ந்தார்.
அந்தப் பணப்பையை வாங்கித்
தாமே எண்ணினார். தொள்ளாயிரமதான்
இருந்தது.
"வியாபா¡¢யே, நீரும்
பொய் சொல்லமாட்டீர்.
அந்தணர் பணப்பையை மறைக்காமல்
உம்மிடம் கொண்டுவந்து
கொடுத்தபடியால் அவரும்
பொய் சொல்லமாட்டார்.
ஆகையால் இந்த விஷயத்தில்
எனக்கு ஒன்று தோன்றுகிறது.
அதாவது ஆயிரம் ரூபாய்
வைத்திருந்த பணப்பை உம்மிடமிருந்து
தொலைந்து போனபடியால்
தொள்ளாயிரம் ரூபாய் கொண்ட
இந்த பை உம்முடையதன்று.
இது வேறொருவருடையதுதான்
என்பதில் சந்தேகமில்லை.
ஆயிரம் ரூபாய் கொண்ட
பையை உம்மிடம் யாராவது
கொண்டுவந்து கொடுத்தால்
அதைப் பெற்றுக் கொண்டு
அவருக்கு நூறு ரூபாய்
கோடுத்துவிடும். இதில்
உமக்குச் சம்பந்தமில்லை.
வீட்டுக்குச் செல்லலாம்"
என்றார்.
அந்தணரைப் பார்த்த
நீதிபதி, "இந்தப் பையில்
தொள்ளாயிரமே இருக்கிறபடியால்
இந்து ரூபாய் கொண்ட பை
தொலைந்துவிட்டது என்று
யாராவது சொன்னால் அவருக்கு
இதைக் கொடும். அதுவரையில்
நீரே வைத்துக் கொள்ளும்"
என்று சொல்லி, அந்தணா¢டம்
பையைக் கொடுத்துவிட்டார்.
வியாபா¡¢க்கு ஒன்றும்
சொல்ல முடியவில்லை. தலையில்
கையை வைத்து வீட்டுக்குச்
சென்றான். பேராசை பெருநஷ்டத்தில்
முடிந்தது.
தர்மத்திலிருந்து
வழுவாதிருந்த அந்தணருக்குப்
பொ¢ய லாபம் கிடைத்தது.
அவருடைய தர்மம் லாபத்தில்
முடிந்து இன்பத்தை விளைவித்தது.
அவர் பையைப் பெற்றுக்
கொண்டு தமது இல்லத்துக்கு
வந்து சுகமாக வாழ்ந்தார்.
*****